2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களுக்கு விடுதி வசதியில்லை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் விடுதி வசதியின்றி சிரமங்களுடன் கல்வி கற்பதாக யாழ். மருத்துவ பீட பீடாதிபதி எஸ்.பாலகுமாரன் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் 600 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். அவர்களுக்கான விடுதி வசதிகள் போதாமல் உள்ளது. எம்மிடம் 350 மாணவர்களுக்கு மட்டுமே விடுதி வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

பல மாணவர்கள் பொருளாதார நிலையில் பின் தங்கிய நிலையில் உள்ளனர். அவர்கள் விடுதி வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி வருகின்றார்கள்.

மாணவர்களுக்கான விடுதி வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நிதி திரட்டும் நோக்குடன் நடன நாடகம் ஒன்றினை யாழிலும் கொழும்பிலும் மேடையேற்ற உள்ளோம் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .