2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஆவரங்கால் சர்வோதயா பகுதியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் மூவரை திங்கட்கிழமை (03) இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் அறுவர் தலைமறைவாகியுள்ளனர், அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டியின் போது, ஏற்பட்ட முறுகல் நிலையில் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இதன் போது ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளானதுடன், அங்கிருந்த கார் ஒன்றும் அடித்து சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .