2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு ரூ.23.35 மில்லியன் ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தார்.

இந்நிதியின் மூலம், மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் 1,032 வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. விவசாயம், மீன்பிடி, கால்நடை, சந்தைப்படுத்தல் மற்றும் கைத்தொழில் ஆகிய பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 75,000 ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களினூடாகவும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று  அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X