Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டி முறையிலான தீர்வு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைத்துள்ள ஒரு நாடு, இரு தேசம் என்பன நடைமுறைக்குச் சாத்தியப்படாதவையாகும். தனியே கோஷம் எழுப்புவதற்கு ஏற்ற விடயங்களாகவே அக்கட்சியினரால் இவ்விரு விடயங்கள் பற்றியும் பேசப்படுகின்றன என்று வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ்மிரருக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'வாழ்வாதாரப் பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் என மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவற்றை முதலில் தீர்க்க வேண்டும். தேர்தலில் முன்னாள் போராளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இணைத்து இருக்கலாம்' என்றார்.
'புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தில் தமிழ்த் தேசியம் பற்றி பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. இவ்வாறு பேசிக்கொண்டிருந்தால், எமது பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களில் இருந்து நாம் அந்நியப்பட்டுவிடுவோம்.
எமது கட்சியைப் பொறுத்தவரையில் 13ஆம் திருத்தச் சட்டத்தின் குறைபாடுகளை நீக்கி அதனை செழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கம் என்னும் விடயம் இருக்க வேண்டும். இதுவே நடைமுறைக்குச் சாத்தியமான வழியாகும்' என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago