2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இலஞ்சம்,ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

George   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் கபே அமைப்பு ஆகியன இணைந்து 'இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (04) நடத்தின.

'அரச ஊழியர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு பொதுமக்கள் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை' என்பதை முன்னிறுத்தி இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் டயஸ் விக்கிரமசிங்க, கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றை ஒழிப்பது தொடர்பில் துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், தனியார், அரச பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும். இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 1954 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்;டு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முறைப்பாட்டாளரின் முறைப்பாடு இரகசியம் பேணப்படும் என்பதுடன், முறைப்பாடு தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .