2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

2026இல் வட மாகாணத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

எதிர்வரும் மழைக் காலத்துக்கு முன்னர், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X