Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - தென்மராட்சி வரணியைச் சேர்ந்த சியானீஸ் மதுசன் என்ற 21 வயது இளைஞனுக்கு நேற்றைய தினம் வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் கெளரவிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதி வாய்ந்த தாலி கொடி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அடங்கிய கைப்பையை யாழ்.அரியாலை பஸ் தரிப்பிடத்தில் வைத்துவிட்டு உரிமையாளர் பஸ் வந்துவிட்டது என்ற பரபரப்பில் அவசரமாக ஏறியுள்ளார்.
சியானீஸ் மதுசன் என்ற இளைஞனின் கண்களில் அந்தக் கைப்பை அகப்பட்டுள்ளது. உள்ளே தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளைக் கண்டதும், கைப்பைக்குள் இருந்த உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு , கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண உறவினரிடம் நேரில் சென்று ஒப்படைத்துமுள்ளார்.
அந்த வகையில் வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் குறித்த இளைஞனுக்கு பொன்னாடை போர்த்தி அவரை பாராட்டி வாழ்த்துமடல் ஒன்றையும் வழங்கி கெளரவித்தார்.
அத்துடன் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சி.பிரபாகரன் அவர்கள் குறித்த இளைஞனுக்கு சந்தன மாலை அணிவித்து கெளரவித்தார்.அத்தோடு குலானந்த குளத்து முருகமூர்த்தி ஆலய நிர்வாக சபைத்தலைவர் குணரத்தினம் அவர்களும் இளைஞனுக்கும் அவரது தாயாருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
01 May 2025
01 May 2025