2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

27 தமிழக மீனவர்கள் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நெடுந்தீவு - தென் கிழக்கு பகுதியில், அத்துமீறி நுழைந்து மீன்பிடியில்  ஈடுபட்ட 27 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படும் கூறல்மீன்கள் அதிகளவில் இந்த பகுதி இருந்ததால், அதனை பிடித்து கொண்டிருந்த போது காற்றின் வேகம் காரணமாக எல்லைதாண்டி வந்ததாக, கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர், இன்று  அனைவரையும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, இலங்கை கடற்படை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .