2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

28 விவசாய சம்மேளனங்களுக்கு போரூட்டினால் உழவு இயந்திரங்கள்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக போரூட் நிறுவனம் இருபத்தெட்டு விவசாய சம்மேளனங்களுக்கு இரண்டு சில்லு உழவு இயந்திரங்களையும் அதனோடு கூடிய பெட்டி கலப்பை சாதனங்களையும் வழங்கியுள்ளது.

இவற்றை வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை புத்தூர் கமநலசேவை நிலையத்தில் இடம்பெற்றது. வைபவத்தில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன், யாழ். மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் உட்பட விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வுழவு இயந்திரங்கள், மீள்குடியமர்ந்த விவசாயிகள் அதிகமாக வாழும் பிரதேச விவசாய சம்மேளனங்களுக்கு வழங்கப்பட்டன. போரூட் நிறுவனம் இத்திட்டத்துக்கு பத்து மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X