2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

’30க்கு முன் ஆதனங்களை துப்புராக்கவும்’

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

பராமரிப்பற்றுக் காணப்படும் ஆதனங்களின் உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள், 30ஆம் திகதிக்கு முன்னதாக தமது ஆதனங்களை துப்புரவாக்கி எல்லைப்படுத்தி சீராக பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கோ.கருணானந்தராசர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் இவ்வேளையில், தமது உறவுகளை டெங்கிலிருந்து பாதுகாத்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையும் பொறுப்புமாகுமெனவும் கூறினார்.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் தமது வீட்டையும் சுற்றுச் சூழலையும் தமது வீட்டின் முன்புற வீதியோரங்களையும் தங்கள் பிரதேசத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணுமாறு, அவர் அறிவுறுத்தினார்.

பராமரிப்பற்றுக் காணப்படும் ஆதனங்களின் உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் 30ஆம் திகதிக்கு முன்னதாக தமது ஆதனங்களை துப்புரவாக்கி எல்லைப்படுத்தி சீராகப்பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறும், அவர் கேட்டுக்​கொண்டார்.

பராமரிப்பின்றி காணப்படும் ஆதனங்களை நகரசபையின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரவும் ஆதன உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் எவரும் உரிமை கோராத ஆதனங்களை நகராட்சி மன்றத்துக்கு சுவீகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் ஆதன உரிமையாளர்கள், இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி செயற்படுமாறும், அவர் கேட்டுக்​கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X