2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

38 இந்திய மீனவர்களுக்கு 13ஆம் திகதி வரை விளக்கமறியல்

Super User   / 2014 ஜனவரி 30 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நெடுந்தீவுக் கடற் பரப்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை பணிப்பாளர் என்.கணேஷமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 6 படகுகளில் வருகை தந்த குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை கடற் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .