Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில், இராணுவத்தினரால் 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உள்ளதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். பிரதேச சபை உறுப்பினர் த.துவாரகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதியொன்றில், உள்ளூர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும் இதில், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தர்ஷனும் கலந்துகொண்டாரெனவும் கூறினார்.
இதன்போது, திடீரென விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர், ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோமெனத் தெரிவித்தனரென்று, துவாரகன் தெரிவித்தார்.
இது தொடர்பில், தான் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகத் தெரிவித்த அவர், ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் சி.சி.டி.வி பதிவுகளில் பார்வையிடமுடியுமென்று, இராணுவத்திடம் தான் தெரிவித்தாகவும் கூறினார்.
ஆனால் இராணுவத்தினர் அதைக் கேட்கவில்லையெனச் சாடிய அவர், சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார், இராணுவத்தினரின் பேச்சைக் கேட்டு, அங்கு உணவு உண்டுகொண்டிருந்த 41 இளைஞர்களை, சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனரெனவும் கூறினார்.
இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லையெனவும், அவர் கூறினார்.
இச்சம்பவம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்த சதி வேலையாகவே தாம் பார்ப்பதாக, துவாரகன் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago