2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

49 சி.சி வகை மோட்டார் சைக்கிள் பதிவுக்கான காலஎல்லையை நீடிக்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 02 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் 49 சி.சி வகை மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான காலஎல்லையை நீடிக்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளரிடம், அதன் பாவனையாளர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இத்தகைய மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான இறுதித்திகதி  கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதியென மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் 49 சி.சி வகை மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்தவர்களுக்கான வாகனப்பதிவு ஆவணம், விற்பனை செய்யும் முகவர்களால் உடனடியாக வழங்கப்படுவதில்லையென்றும் அந்த வாகனப் பதிவு ஆவணங்களைப் பெறுவதற்கு தாம் மாதக்கணக்கில் குறித்த முகவர் நிலையங்களுக்கு அலைந்து திரிய வேண்டியுள்ளதாகவும் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X