Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 14 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
2017 டிசெம்பர் 31ஆம் திகதிவரை 5 வருடங்களாக வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறப்படாத வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் எனக் கருதி அவை அனைத்தினதும் பதிவுகள் நீக்கப்படும் என வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாகனத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக வரி அனுமதிப்பத்திரம் பெறவில்லையாயின் உடனடியாக அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் நிலுவையைச் செலுத்தி வரிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
வாகனம் பழுமடைந்த நிலையில் இருக்குமாயின் பிரதேச செயலகத்தில் நிலுவைக் கொடுப்பனைவைச் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை வாகன உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதிருப்பின், அந்த வகை வாகனங்களின் பதிவுகள் எதுவித முன்னறிவித்தலுமின்றி மோட்டார் வாகனப் பதிவாளரால் நீக்கப்படும் எனவும் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
35 minute ago
40 minute ago
1 hours ago