2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

50 கோழிகளுக்கு மேல் வளர்ப்பவர்கள் பிரதேச சபையில் பதிவு செய்துகொள்ள உத்தரவு

Super User   / 2012 மே 03 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (கவிசுகி)
   
யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 50 கோழிகளுக்கு மேல் வளர்ப்பவர்கள் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அப்பிரதேச சபை அறிவித்துள்ளது.

கோழிகளை வளர்ப்பவர்களினால் சுகாதார சீர்கேடுகள் நடைபெறுவதாக பொது மக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் சுகிர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பதிவுசெய்வதன் மூலம் சுகாதார முறையில் கோழி வளர்ப்புக்குரிய ஆலோசனைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மூலம் வழங்குவதற்கு ஏற்ப இந் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் சுகிர் குறிப்பிட்டார்.

புதிதாக ஆதனம் கொள்வனவு செய்பவர்கள் 90 நாட்களுக்குள் புதிய பெயர் மாற்றத்திற்குரிய ஆதனங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் சகிர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .