2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

566 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கிவைப்பு

George   / 2014 டிசெம்பர் 07 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெய்க்கா நிறுவனத்தால், முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 566 குடும்பங்களுக்கு 8 ஆயிரத்து 490 தென்னங்கன்றுகள், சனிக்கிழமை (06) வழங்கப்பட்டன.

அம்பாள்புரம் பொதுநோக்கு மண்டபத்தில் அம்பாள்புரம் கிராமஅலுவலர் கே.குணசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து இந்த தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பாள்புரம், கொல்லைவிளாங்குளம், சிவபுரம் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய 4 கிராமஅலுவலர்கள் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு தலா 15 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.

யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான தென்னைகள் அழிக்கப்பட்டமையால் அதனை நம்பிய வாழ்வாதாரங்களை கொண்ட மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.

அவர்களின் வாழ்வாதாரங்களை மீண்டும் அதேநிலைக்கு கொண்டு வரும் நோக்குடன் இந்த தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜெய்க்கா நிறுவனம் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .