Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 27 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜிதா
யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட, சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி கற்று வந்த 6 வயதான சிறுமி சிவனேஸ்வரன் றெஜினா, படுகொலை செய்யப்பட்டுள்ளாரென, பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டே அச்சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், பாலியல் ரீதியிலான எவ்விதமான தொந்தரவுக்கும் அம்மாணவி உள்ளாக்கப்படவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியால் நேற்று (26) மேற்கொள்ளப்பட்டது.
சிறுமியின் கழுத்து, கயிற்றால் நெரிக்கப்பட்டமைக்கான தடயம் காணப்படுவதுடன், அச்சிறுமி எந்தவிதமான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நால்வரும், வட்டுக்கோட்டைப் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பாடசாலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய மேற்படி சிறுமி, வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்திலுள்ள, ஆள்நடமாட்டமற்ற பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து, திங்கட்கிழமை மாலை (25) சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .