2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

7 கைக்குண்டுகள் மீட்பு

Editorial   / 2019 மே 30 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

யாழ்.கொழும்புத்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து 7 கைக்குண்டுகள் இன்று (30) மீட்கப்பட்டுள்ளன.

கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் உள்ள வீட்டின் மலசலகூட குழியை துப்பரவு செய்த போது குறித்த குழியினுள்  கைக்குண்டுகள் காணப்பட்டதையடுத்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த குழிக்குள் இருந்து 7 கைக்குண்டுகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .