Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 31 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
1983ஆம் ஆண்டு, ஜுலை கலவரத்தில், 7 பேர் தான் உயிரிழந்தார்கள் என்று கூறுவது தவறு என்றும் என்ன நடந்தது என்பது சகலருக்கும் தெரியும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கை இராணுவத்தளபதிக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, ஜூலைக் கலவரத்தில், 7 பேர் தான் உயிரிழந்ததாக அரசாங்கத் தரப்பினர்கள் கூறியுள்ளமை குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த 1983ஆம் ஆண்டு, ஜூலைக் கலவரம் நடைபெற்ற காலப்பகுதியில், நான் கொழும்பில் தான் இருந்தேன். எனக்குத் தெரிந்தவர்கள் கூட, காருடன் சேர்த்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அவ்வாறு, அந்தக் காலப் பகுதியில் நடந்த சம்பவங்கள் எல்லோருக்கும் தெரியும்.
“அவ்வாறிருக்கையில், ஏழு பேர் தான் இறந்தார்கள் என்று கூறினால், சிரிப்பார்கள். இதனை யார், எதற்காகச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனாலும், அவ்வாறு ஏழு பேர் என்று கூறுவது தவறு. அந்தக் கலவரம் குறித்து எத்தனையோ நூல்களும் வந்துள்ளன.
இந்நிலையில், அந்தக் கலவரம் குறித்து அமைக்கப்பட்டக் குழுக்கள் குறித்தும் முதலமைச்சரிடம் வினவியபோது,
“இலங்கையில் அப்படித் தான் ஒவ்வொன்றுக்கும் குழுக்கள் அமைக்கப்படும். ஆனால், அந்தக் குழுக்களது கருத்துகள் நடைமுறைப்படுத்தவோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்பட மாட்டாது. இது தானே, எங்களுடைய சரித்திரம்” என்று, இதன்போது முதலமைச்சர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .