Niroshini / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
சட்டவிரோதமான முறையில் அளவுக்கு அதிகமாக உடைமையில் மதுபான போத்தல்களை எடுத்து சென்ற 2 சந்தேக நபர்கள், இன்று (19), கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குணதிலக தெரிவித்தார்.
காரைநகர் - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் பொன்னாலை சந்தியில் வைத்து, இவர்கள் கைது செய்யப்பட்டதாக, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த ஹயஸ் வாகனம் ஒன்றை சோதனை செய்ய முற்பட்ட போதே, அதில் இருந்து 750க்கும் மேற்பட்ட 180 மில்லிலீற்றர் கொள்ளளவு உடைய மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று போயா தினம் என்பதால், அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்தோடு இந்த மதுபான போத்தல்கள் எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago