2025 மே 17, சனிக்கிழமை

’90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

30 வருடகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்தபோது, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில், 90 சதவீதமான காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

யாழ். முற்றவெளியில், நேற்று (30) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற, “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு முறையும் தன்னைச் சந்திக்கும் போது, காணிகளை விடுவிக்கமாறு கோருவதாகவும் தன் கையில் அதிகாரம் இருந்தால், உடனே காணிகள் அனைத்தையும் விடுவித்துவிடுவதாகவும் கூறினார்.

உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட காணிகளைத் தவிர, தற்போது மிகுதியாக இருக்கும் காணிகள், விரைவில் கையளிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .