2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

9½ கோடி ரூபா, 1500 பவுண் நகை ஏமாற்றிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 மார்ச் 07 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வெளிநாட்டிற்கு வேலை பெற்றுத்தருவதாக கூறி 9 ½ கோடி பணமும் 1500 பவுண் நகைகளையும் ஏமாற்றிய பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

சண்டிலிப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதியும், தாயுமாக சேர்ந்த பல்வேறு நபர்களிடமும் பணம் பெற்றுக் கொண்டதுடன் 1500 பவுண் நகைகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பணம் நகைகளை வாங்கி ஏமாற்றிக் கொண்டு,இந்தியாவிற்கு படகில தப்பிச் செல்வதற்காக குருநகர் மீனவர்களிடம்; பேரம் பேசியதுடன், புத்தளத்தில் மறைந்து வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் பணம் மற்றும் நகைகளை கொடுத்தவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் புத்தளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புத்தளம் பகுதியில் வைத்து குறித்த யுவதியும் தாயும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மானிப்பாய் பொலிஸாரினால் மல்லாகம்; நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மல்லாகம் நீதிவான் மகளை 7 நாட்கள் விளக்கமறியலில் வைத்ததுடன், தாயை விடுதலை செய்துள்ளார்.

குறித்த வழக்கு நாளை மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X