A.P.Mathan / 2011 டிசெம்பர் 10 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி, கிரிசன்)
மக்கள் விடுதலை முன்னணியியிலிருந்து பிரிந்து சென்றவர்களால் அமைக்கப்பட்ட மக்கள் போராட்ட இயக்கத்தின் அமைப்பாளர் லலித்குமார் வீரராஜ் உட்பட இருவரை நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் காணவில்லை என யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் காணாமல் போனவர்களின் விபரங்களை வெளியிடக்கோரியும் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக நேற்று மாலை வீட்டிலிருந்து புறப்பட்டவர்கள் இன்னமும் வீடு வந்து சேரவில்லை என்று அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லலித் குமார வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை பயணித்துள்ளனர். இவ்வேளையிலேயே அவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என தாங்கள் அஞ்சுவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் (ஜன அரகலய) உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவர் பற்றியும் இதுவரையில் எதுவித தகவலும் கிடைக்கவில்லை என ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ´மக்கள் போராட்ட இயக்கத்தின்´ தேசிய அமைப்பாளருமாகிய அஜித் குமார தெரிவித்துள்ளார்.
லலித் குமார வீரராஜ் என்பவருக்கு ஏற்கனவே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த தாகவும் இவரைக் கடத்தியவர்கள் தயவு செய்து விடுதலை செய்யும் படியும் கேட்டுள்ளனர். அவர் கடத்தப்பட்டமை தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ் அமைப்பின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.

21 minute ago
26 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
17 Dec 2025
17 Dec 2025