2025 ஜூலை 16, புதன்கிழமை

அக்கராயன் ஆசிரிய மத்திய நிலையத்தை புனரமைக்க வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நடராசா கிருஸ்ணகுமார்

அக்கராயன் பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சி அக்கராயன் ஆசிரிய மத்திய நிலையத்தை மீளவும் புனரமைத்து, ஆசிரியர்களின் வாண்மை விருத்திச் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அக்கராயன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி, அக்கராயன் ஆசிரிய மத்திய நிலையத்தை மீள இயக்குமாறு கோரி, அக்கராயன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரிடம் மனுவொன்றை கையளித்துள்ளது.
 

அக்கராயன் மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (20) கூடிய பழைய மாணவர் சங்கத்தினர் அக்கராயனில் செயலிழந்துள்ள ஆசிரியவள நிலையத்தை இயங்க வைப்பதற்கான கலந்துரையாடலை மேற்கொண்டதன் அடிப்படையிலேயே வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இம்மனுவை கையளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • கிளி/அக்கராயன் ம.வி ஐரோப்பிய பழைய மாணவர் ஒன்றியம்" Monday, 22 February 2016 09:21 AM

    கிளி/அக்கராயன் ம.வி ஐரோப்பிய பழைய மாணவர் ஒன்றியம்". எங்களின் ஒன்றியத்தின் முடிவும் அதுவே...

    Reply : 0       0

    கிளி/அக்கராயன் ம.வி ஐரோப்பிய பழைய மாணவர் ஒன்றியம்" Monday, 22 February 2016 09:22 AM

    கிளி/அக்கராயன் ம.வி ஐரோப்பிய பழைய மாணவர் ஒன்றியம்". எங்களின் ஒன்றியத்தின் முடிவும் அதுவே...

    Reply : 0       0

    கிளி/அக்கராயன் ம.வி ஐரோப்பிய பழைய மாணவர் ஒன்றியம்" Monday, 22 February 2016 09:26 AM

    கிளி/அக்கராயன் ம.வி ஐரோப்பிய பழைய மாணவர் ஒன்றியம்". எங்களின் ஒன்றியத்தின் முடிவும் அதுவே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X