2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அங்க பிரதட்சணம் செய்தவர் மரணம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்த  யாழ்ப்பாணம், நாவலர் வீதியை சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் (வயது 57) என்பவர்  உயிரிழந்தார்.

ஒவ்வொரு வருடமும் திருவிழா காலத்தில் இவர். வழக்கமாக   அங்கப் பிரதட்சணம் செய்து வருகிறார். திருவிழா தொடங்கிய நாள்முதல் வழமை போன்று அவர் இந்த வருடமும் தினமும் அங்கப் பிரதட்சணம் செய்து வந்துள்ளார்.
 

திங்கட்கிழமை 28 அங்கப் பிரதட்சணத்தை நிறைவு செய்த நிலையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாரடைப்பு காரணமாகவே மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மரண விசாரணைகளை பருத்தித்துறை ஆதார மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா நடத்தினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X