Editorial / 2018 மார்ச் 15 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாaக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு நாளை (16) இடம்பெறவுள்ளது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி தேர்தலில் வடகிழக்கில் ஒரு சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாது தொங்கு நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் ஒரு கட்சி ஆட்சியமைப்பதுக்கு ஏனைய கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழக்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வது அவசியமானது.
அதனடிப்படையில் கூட்டமைப்பினராகிய நாம், சில சபைகளில் ஆட்சிமைப்பது குறித்து சுயேட்சைக் குழுக்களுடன் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம். ஆயினும் எந்தக் கட்சியுடனும் உத்தியோகபூர்வ பேச்சுக்கள் எதனையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. ஆகையால் எந்தெந்தக் கட்சிகளுடன் பேசுவது, யாருடைய ஆதரவுகளைக் பெற்றுக் கொள்வது என்பது குறித்தே அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற உள்ளது.
கலந்துரையாடலின் பின்னரே இது குறித்தான இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அந்த முடிவுகளின் அடிப்படையில் ஏனைய சில கட்சிகளுடன் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்படுமென தெரிவித்தார்.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago