2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அச்சுறுத்திய மாணவன் கத்தியுடன் கைது

Janu   / 2023 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும்  மாணவன் கத்தியுடன் திங்கட்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 

வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று வர்த்தக நிலையத்தில் வேலை செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவனை கைது செய்துள்ளனர். 

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

எம்.றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X