2025 மே 12, திங்கட்கிழமை

அச்சுவேலி பகுதியில் காணி விடுவிப்பு

Editorial   / 2018 மே 31 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி பகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் இன்று (31) பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது.

9 குடும்பங்களுக்குச் சொந்தமான 3ஏக்கர் காணிகள் 1995 ஆம் ஆண்டு முதல் 521 ஆவது படையணியின் பயன்பாட்டிலிருந்தது.

இதில் 50 வீதமாக காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி காணிகள் எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் விடுவிக்கப்படும் எனவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மிகுதி காணிகளும் விடுவிக்கப்படும் வரை காணிகளுக்கு செல்லமாட்டோம் என குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X