2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

அச்சுவேலியில் விபத்து: ஒருவர் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன், எம். றொசாந்த்  

யாழ். அச்சுவேலி பகுதியில் iஇன்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தெற்கு, நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் நாவற்குழி ஐயனார் கோயில் பகுதியைச் சேர்ந்த குலேந்திரன் சுஜீவன் (வயது 19) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ் - பருத்தித்துறை பிரதான வீதியில் வேகமாக சென்ற குறித்த நபர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நடப்பட்டு இருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது. இதன்போது படுகாயமடைந்தவரை மீட்ட பொதுமக்கள் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .