Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 28 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - வடமாராட்சி எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி
செலுத்த வருவோரை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டனர்.
மாவீரர் நாளான ஞாயிற்றுக்கிழமை (27) எள்ளாங்குளம் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு
அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன்போது இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினர் மற்றும் அப்பகுதியில்
குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் அங்கு வருவோரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து
அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
அதேவேளை ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட போதும்,
அச்சுறுத்தல்களை மீறி அங்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வழக்கம்போல் மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு மணி ஒலிக்க பிரதான ஈகை சுடாினை மேஜா்
சோதியா (சோதியா படையணி) அவா்களுடையt தாயாா் ஏற்றிவைத்தாா்.
தொடா்ந்து மாவீரா்களுக்கான பாடல் ஈகையோருக்கான ஈகை சுடா்கள் எற்றப்பட்டு கண்ணீா்
மல்க பூக்கள் சொாிந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை இடித்து அழித்த இராணுவத்தினர் தற்போது
அவ்விடத்தில், 551ஆவது படைப்பிரிவின் முகாமை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. R
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago