2025 மே 12, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நெல்லியடியில், இன்று நடைபெற்றது.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பெரும் பல்வேறுபட்ட சமூக நலன் சார் வேலைத்திட்டங்களில் ஒன்றாகிய வீடற்ற வறிய குடும்பத்தினருக்கு வீடு நிர்மாணித்து கொடுக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகவே, நெல்லியடி மற்றும் பொலிகண்டி பகுதிகளில் உள்ளபெண் தலைமைத்துவ குடும்பங்கள் இரண்டுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதன்போது, யாழ். மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

கடந்த  மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றும் இன்றையதினம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X