Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 05 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
அடுத்து வரும் நாள்களில், தாhங்கள் அழைக்க விரும்பிய தலைவர்களோடு பேசி. ஒருகுடையின் கீழ், ஒரே கூட்டாகச் செயற்படுவதற்கான முடிவை இறுதியாக எடுக்கவிருப்பதாக, டெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள டெலோ அலுவலகத்தில், நேற்று (04) மாலை நடைபெற்ற தமிழ்க் கட்சி தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர். அரசாங்கத்துக்கு எதிரான பலமான சக்தியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில், தேசியத்தை நேசிக்கின்ற அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்ததாகவும், இதில், சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் எனவும் ஏனையவர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறினார்.
இந்த வாரம், பாராளுமன்றம் கூடிய பின்னர். அடுத்தக் கட்டமாக மீண்டும் ஒரு கூட்டான, பலமான அமைப்பாக செயற்படுவதற்கான முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்த அவர், இதன் பிரகாரம், அடுத்து வரும் நாள்களிலேயே, தாhங்கள் அழைக்க விரும்பிய தலைவர்களோடு பேசி. இறுதியாக ஒருகுடையின் கீழ், ஒரே கூட்டாகச் செயற்படுவதற்கான முடிவை எடுக்கவிருப்பதாகவும் கூறினார்.
உண்மையிலேயே எல்லோரையும் அரவணைத்து போக வேண்டும் என்பதுதான் தங்களுடைய பிரதான நோக்கமெனத் தெரிவித்த செல்வம் எம்.பி, அந்த வகையிலே, தாங்கள் மீண்டும் அந்தக் கட்சித் தலைவர்களிடம் இது சம்பந்தமாக கலந்தாலோசித்து, நேரே சென்று, அவர்களுடன் பேசி, அவர்களை இந்தப் பலமான ஒற்றுமைக்குள் கொண்டு வருவோமென்றும் கூறினார்.
'நாங்கள் சி.வி. விக்னேஸ்வரன் தரப்புக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்;. அந்த வகையில். மீண்டும் அவர்களை சந்திக்க இருக்கின்றோம். அவர்களை சந்தித்து ஒற்றுமை தொடர்பில் பலமான கூட்டாக செயற்படுவதற்கு முயற்சியை மேற்கொள்வோம். அவர்களும் அதற்கு விரும்புவார்கள்.
'அந்தவகையில், ஒற்றுமையை உருவாக்கி அரசாங்கத்தினுடைய எதிர்ப்பை தடுக்க வேண்டும். எங்களுடைய இனத்துக்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்' என்றும், அவர் கூறினார்.
அத்துடன், புலம்பெயர்ந்த உறவுகiயும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களையும் இணைத்து, பலமான சக்தியாக காட்டவேண்டுமென்றும், அவர் தெரிவித்தார்.
மேலும், 'ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் மேல் பழியை போட்டுவிட்டு இருக்க முடியாது. ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்றது' என்றும், செல்வம் எம்.பி தெரிவித்தார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago