Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் வாள்களுடன் வீதியில் அட்டகாசம் புரிந்து, கொள்ளையில் ஈடுபட்ட ஐவரில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், சங்கானை வைத்தியசாலைக்கும், தொட்டிலடி சந்திக்கும் இடைப்பட்ட வீதியில் நேற்று (10) மாலை 6 மணியளவில், 2 மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் கொண்ட கும்பல் ஒன்று, வீதியில் சென்றுக்கொண்டிருந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்களை வீசி, தகாத வார்த்தைகளால் பேசி, அட்டகாசம் புரிந்துள்ளனர்.
இதன்போது வீதியில் நின்றவர்கள் அவர்களை ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்துள்ளனர். அதனை அவதானித்த வாள் வெட்டு குழு தம்மை ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்தவர்களை துரத்தி தாக்க முற்பட்டுள்ளனர்.
அத்துடன், சங்கானை - சிலம்பு புளியடி ஆலயத்துக்கு அருகில் இருந்த வேலி மற்றும் இளைஞர் மன்று கதவுகள் என்பவற்றை சேதமாக்கியுள்ளனர்.
இதன்போது, அவ்வீதி வழியே வந்துகொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்தில் வாளை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்தபோதும், குறித்த குழுவினர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அவ்வாறு தப்பிச்சென்றவர்களில் மூவர், சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தெல்லிப்பளை பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டனர். இருவர் தப்பி சென்றுவிட்டனர்.
பொலிஸாரிடம் மாட்டியவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகள் என்பன மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட விசாரணைகளின் அடிப்படையில் இன்னுமொருவர் கைது செய்யப்பட்டார்.
தப்பிச் சென்ற மற்றவரையும் கைதுசெய்ய போலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago