2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அதிகாலையில் கைவரிசை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கைலாசப்பிள்ளையார் கோயில் பகுதில் உள்ள கடை ஒன்றின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள், 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச்  சென்ற சம்பவமொன்று, இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கடை உரிமையாளர், வழமைபோன்று நேற்று முன்தினம்  இரவு 9 மணியளவில், வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இன்று காலை, கடையினைத் திறந்து உள்ளே சென்றபோது, கூரை பிரிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கடைக்குச் சென்று பார்த்தபோது, காசுப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 25ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை தேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X