2025 ஜூலை 19, சனிக்கிழமை

அத்துமீறிய மீன்பிடியினை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையின் உதவி

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியினை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையின் உதவியினை நாடியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் திங்கட்கிழமை (04) தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடலில் திங்கட்கிழமை (04) காலை இந்திய றோலர் ஒன்றினால் முல்லைத்தீவு கடற்றொழிலாளி ஒருவரின் படகு மோதி மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

படகு மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எனக்கு அறிவிக்கப்பட்டவுடன் கடற்படைக்கு தகவல் வழங்கினேன். அதற்கிடையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் இந்திய றோலரை கரைக்குக் கொண்டு வந்திருந்தார்கள். சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடற்றொழிலாளர்களின் நெருக்கடி நிலைமை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடற்றொழிலாளர்களின் சமாசத்தினரையும் கடற்படையினரையும் இணைத்து எதிர்வரும் 09ஆம் திகதி கூட்டமொன்றினையும் நடத்தவுள்ளோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X