2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாமென கோரிக்கை

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அ.அரசரட்ணம்

சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் நடராசா ரவீந்திரனின் பணி இடமாற்றம் என்பது தொடர்பில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் அதிபரின் இடமாற்றம் குறித்து இடமாற்றத்தை நிறுத்த வேண்டி வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளரைக் கோரியுள்ளனர்.

வடலியடைப்பு கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிபர் பதவி நிலையிலிருந்து பாடசாலையின் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளில் முன்னேற்றத்தை செயற்படுத்தி வந்த அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் பெற்றோர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

'மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மட்டுமல்ல பௌதிக வளங்களையும் அதிகரித்து பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஆளுமை, முகாமைத்துவம், திட்டமிடல், வழிநடத்தல், தலைமைத்துவம், செயலாற்றல் பண்புகளுடைய அதிபரைத் திடீரென இடமாற்றம் செய்தல் மாணவர்களின் கல்வியில் மட்டுமன்றி பாடசாலையின் வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும்.

பாடசாலையின் வளர்ச்சியின் நிமித்தம் இவரால் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள வேலைகளை இவர் செய்து முடித்து பாடசாலை மேலும் வளர்ச்சியடைவதற்கு ஏற்புடையதாகவும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் திடீர்த்தாக்கத்தை ஏற்படாதிருக்கவும் இவரைத் தொடர்ந்து இப்பாடசாலையில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பணியாற்றுவதற்கு அனுமதிக்கவும்' என கோரியுள்ளனர்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X