2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அதிபர்களுக்கான விண்ணப்பம் கோரல்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன்

யாழ்ப்பாணக் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் வெற்றிடமாகக் காணப்படும் அதிபர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கு இலங்கை அதிபர் சேவை தரம் 3, தரம் 2 தர நிலைகளிலுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுடன், அண்மையில் புதிய அதிபர்களாக நியமனம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள், இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக யாழ்.கல்வி வலயப் பணிமனையில் சமர்ப்பிக்க வேண்டும் என யாழ். கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராசா அறிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் சேவை தரம் 2 யைச் சேர்ந்தவர்கள் - சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயம், நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம், கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம் மற்றும் கொழும்புத்துறை சென்.யோசப் வித்தியாலயம் ஆகியவற்றுக்கும்,

இலங்கை அதிபர் சேவை தரம் 3 ஐச் சேர்ந்தவர்கள் - சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் கொக்குவில் மேற்கு ஸ்தான சீ.சீ.த.க பாடசாலை ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்படிவத்தை யாழ்.கல்வி வலய நிர்வாக கிளையில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X