Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஜூன் 28 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
துமிந்த சில்வாவை விடுவித்து, ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென, இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் - வடமராட்சிஇ முள்ளி பகுதியில்இ சுமார் 230 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலைஇ நேற்று (27) மாலை 4 மணியளவில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆங்கு தோடர்ந்துரைத்த அவர், இந்தத் திட்டம் முக்கியமானதொரு திட்டமெனவும் குப்பையை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்காகவே, இந்தத் திட்டம் உருவானதெனவும் கூறினார்.
இந்தத் திட்டத்தை தங்களுக்கு வேண்டும் என்று யாழ். மாநகர சபை பிடிவாதமாக இருந்த போது, கரவெட்டியில் இத்திட்டத்தை அமல்படுத்தும் போதே, பல பிரதேச சபைகள் பயனடையும் என்று, மாநகர சபைக்கு எடுத்துரைத்தோம்.
அத்துடன், மாற்றுத்திட்டமொன்றை மாநகர சபைக்கு வழங்குவோம் என்று தெரிவித்து, கரவெட்டி பிரதேச சபையில், இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் என்றும், சுமந்திரன் கூறினார்.
இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருத்துரைத்த சுமந்திரன், 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை உண்மையில் மகிழ்ச்சியான விடயமெனத் தெரிவித்ததுடன், மற்றவர்களை என்ன அடிப்படையில் விடுதலை செய்யவில்லை என்பது தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.
ஆனால். துமிந்த சில்வாவை சாட்டோடு சாட்டாக விடுதலை செய்யப்பட்டது கண்டனத்துக்குரியதெனத் தெரிவித்த அவர், 'இது நீதிமன்ற சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றது. இதன் ஊடாக ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்' என்றும் கூறினார்.
அத்துடன், அரசில் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகளுடன் கலந்துரையாடிய சுமந்திரன் எம்.பி, அவரின் விடுதலைக்காக தாங்கள் குரல் கொடுப்போமென்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago