2025 ஜூலை 05, சனிக்கிழமை

அதிபரை பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு பணிப்புரை

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண  கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவர், அதே பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்காமல் இந்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென, ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்தே, குறித்த பாடசாலையின் அதிபரை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிக இடைநிறுத்தம் செய்வதற்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசாரணைக் குழுவொன்றினையும் நியமிக்குமாறும், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். 

இதேவேளை, துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் குறித்த ஆசிரியரும் விசாரணைகள் முடியும்வரை சேவையிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .