Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 25 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட யா/ நாகர் கோவில் அ.மித.க. பாடசாலை தரம்- 2, யா/ துன்னாலை வடக்கு மெ.மி.த.க.பாடசாலை தரம் - 3, யா/ புனிதநகர் தமிழ் வித்தியாலயம் தரம் - 3 ஆகிய பாடசாலைகளுக்கான அதிபர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கீழ் வரும் தகைமையுடைய அதிபர்கள் குறித்த பாடசாலைகளுக்கான அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரி பின்வரும் தகைமையை கொண்டிருத்தல் வேண்டும்.
தரம் - 2 பாடசாலைக்கு விண்ணப்பிப்போர், இலங்கை அதிபர் சேவையில் தரம்- 2 அல்லது அதற்கு மேற்பட்ட தரமுடையவர்களாக இருத்தல் வேண்டும். தரம் - 3 பாடசாலைக்கு விண்ணப்பிப்போர், இலங்கை அதிபர் சேவையில் தரம் - 3 அல்லது அதற்கு மேற்பட்ட தரமுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
தரம் - 2 பாடசாலைகளுக்கு உரிய தரத்தையுடையவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பட்சத்தில், தரம் - 3 அதிபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன், தங்கள் அதிபர் தரத்துக்கு பொருத்தமற்ற பாடசாலைகளில் கடைமையாற்றுபவர்களும் விண்ணப்பிக்க முடியம்.
இலங்கை அதிபர் சேவையிலுள்ள அதிபர் பதவியில் கடமையாற்றாதவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரி வடமராட்சி கல்விவலயப்பாடசாலைகளில் நிரந்தரமாக சேவையாற்றுபவர்களாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரி தற்ப்போது கடமையாற்றும் பாடசாலையில் ஆகக் குறைந்தது மூன்று வருடங்கள் தொடர்ச்சியான சேவையை ஆற்றியிருத்தல் வேண்டும்.
ஆகக் குறைந்தது மூன்று வருடங்களுக்கு கடமையாற்றக் கூடிய வயதெல்லையை உடையவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி டிசெம்பர் 6ஆம் திகதி ஆகும்.
விண்ணப்பதாரிகள் நேர்முத் தேர்வுக்கு தோற்றுதல் வேண்டும். விண்ணப்பப் படிவங்களை வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி நிர்வாகப் பிரிவில் பெற்று விண்ணப்பிக்க முடியும், என வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.நந்தகுமார் தெரிவித்தார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago