2025 மே 17, சனிக்கிழமை

அனைத்து சித்த வைத்திய நிலையங்களிலும் வர்ம சிகிச்சை

எம். றொசாந்த்   / 2019 மே 29 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்தில் உள்ள அனைத்து சித்த வைத்திய நிலையங்களிலும் வர்ம சிகிச்சை முறையை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் தெரிவித்தது.

நரம்பு, எலும்பு சார்ந்த செயற்படாத உடற்பாகங்களை தூண்டல் மூலம் குணப்படுத்தும் ஒரு சித்த வைத்திய முறைமையே வர்ம சிகிச்சை எனப்படுகின்றது.

வடமாகாணத்தில் உள்ள 13 சித்த வைத்திய நிலையங்களில் 8 வகையான சித்த வைத்திய சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. யோகா, அக்குப்பஞ்சர் உள்ளிட்ட இந்த எட்டு வகையான சிகிச்சை முறைகள் மூலம் அகம் மற்றும் புற ரீதியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இதுவரையான கால பகுதியில் வர்ம சிகிச்சை யாழ்.மாவட்டத்தில் ஒரு வைத்தியசாலையில் மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றன. அந்நிலையில் இந்த சிகிச்சை முறையை வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள சித்த வைத்தியசாலையில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

அதற்கு சிறப்பு பயிற்சிகள் தேவைப்பட்டமையால் இந்தியாவில் இருந்து துறை சார்ந்த நிபுணர்களை அழைத்து வடமாகாணத்தில் சுமார் 40 சித்த வைத்தியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வடமாகாணத்தில் உள்ள அனைத்து சித்த வைத்தியசாலைகளிலும் வர்ம சிகிச்சைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .