2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அமெரிக்கத் தமிழ் விஞ்ஞானியின் நிதியுதவியில் மாணவர்களுக்கு அலைபேசிகள்

Editorial   / 2020 மே 24 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா. சிவானந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஸ்மார்ட் அலைபேசி வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் அலைபேசிகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.

கொவிட் 19 பரவலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகளால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி முறையினூடாகக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில், இணையவழிக் கற்றல் வசதிகள் பற்றி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், திறன் பேசி வசதிகள் இல்லாத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, பேராசிரியர் சிவா. சிவானந்தன், சுமார் 22 இலட்சம் ரூபாய்க்கு 100 அலைபேசிகளைக் கொள்வனவு செய்து, அலைபேசிகளை யாழ். பல்கலைக்கழக அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமியிடம் கையளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X