2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அமைச்சர்கள் மீது விசாரணை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கடிதம்

Editorial   / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடமாகாண அமைச்சர்கள் மீது உள்ளுர் பத்திரிகையால் முன்வைக்கப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பிரதம செயலாளர் ஊடாக விசாரணை நடத்துமாறு மாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர், முதலமைச்சருக்கு இன்று (10) கடிதம் அனுப்பியுள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள் மீது மோசடிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று, மோசடிக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவியிலிருந்து விலகியிருந்தனர்.

இந்நிலையில், தற்போதுள்ள அமைச்சர்கள் மோசடியில் ஈடுபடுவதாக அண்மையில் உள்ளுர் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .