2025 மே 19, திங்கட்கிழமை

அம்புலன்ஸ் வண்டியில் பரீட்சைக்குச் செல்லும் மாணவி

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்புலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்துக்கு வந்து, பரீட்சை எழுதி செல்கிறார்.

யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவரே, டெங்கு பாதிப்பின் மத்தியிலும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதி வருகிறார்.

இவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றுக்கு இலக்கானார். இதையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு தயாராகியிருந்த அந்த மாணவி, டெங்கு தொற்றால் பரீட்சை எழுதும் வாய்ப்பை கைவிட தயாராக இருக்கவில்லை.

பரீட்சை எழுதப் போவதாக கோரிக்கை விடுத்திருந்தார். அவரது உடல்நிலையை ஆராய்ந்த வைத்தியர்கள், வைத்தியசாலையில் தங்கியிருந்தபடியே பரீட்சை எழுத அனுமதித்தனர். இதற்காக வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அவரை பரீட்சை மண்டபத்துக்கு அழைத்து சென்று, பரீட்சை முடிந்ததும் மீண்டும் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் அழைத்து செல்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X