2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அராலி மத்தியில் வீதி புனரமைப்புப் பணிகள் அங்குரார்ப்பணம்

Niroshini   / 2016 ஜூன் 01 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

யாழ். மாவட்ட சங்கானை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அராலி மத்தியில், அல்லியபுலம் தாரணன் முருக மூர்த்தி கோவில் வீதி அமைக்கும் பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் செவ்வாய்க்கிழமை (31) மாலை 4.30 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், அமைச்சரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பிரதம பொறியியலாளர் முரளிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய ஓய்வுபெற்ற அதிபர்கள் சிலர் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் வீதி திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்க அல்லியபுலம் வந்த வேளையில், தாம் இக் கோவில் வீதியை புனரமைத்துத் தருமாறு கேட்டபோது, நிச்சயமாக செய்து தருவேன் என்று வாக்குரைத்து சென்றார்.

பொதுவாக அரசியல்வாதிகள் வாக்குகொடுப்பார்கள். ஆனால், நிறைவேற்றுவது குறைவு. ஆகவே, அந்த வகையில் சொன்ன சொல்லை சரியாக, சரியான நேரத்தில் கோவில் திருவிழா வேளைக்கு முன்னர் செய்து தர ரூபாய் 1.2 மில்லியன் நிதி ஒதுக்கி, இன்று வேலைகளை ஆரம்பித்து கொடுத்துள்ளார் என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X