2025 மே 22, வியாழக்கிழமை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடையாள வேலை நிறுத்தம்

எம். றொசாந்த்   / 2018 மே 08 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நீங்கலாக அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 14 ஆம் திகதி 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமையைக் கண்டித்தே குறித்த அடையாள வேலை நிறுத்தம்  மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது அவசர சிகிச்சை அனைத்து வைத்தியசாலைகளிலும் வழங்கப்படும் என இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X