Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.
சனிக்கிழமை (31) நடைபெற்ற யாழ். சிறைச்சாலை கட்டட திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், 'இலங்கை சிறைச்சாலையில் 18,000 முதல் 20,000 வரையிலான கைதிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்குரிய சகல விடயங்களும் வழங்கப்படுகின்றதா என்பது கேள்விக்குறியான விடயமாக இருக்கின்றது.
அத்துடன், ஒரு சிறைக்கைதிக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் அரசாங்கத்தினால் செலவு செய்யப்படுகின்றது. பாரிய குற்றத்தினைப் புரிந்தவர்களுக்கு பிணை வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.
கைதிகள் தமிழர், சிங்களவர் என்ற பேதம் பார்க்காமல், அனைத்துக் கைதிகளும் மனிதர்கள் என்ற அடிப்படையில் உதவி ஒத்தாசைகள் வழங்கப்பட வேண்டும்.
கைதிகளினால் அரசாங்கத்துக்கு பாரிய செலவு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சார்ந்த கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் சட்டமா அதிபர் மற்றும் பிரதமரால் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் படி, பிணையில் விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 25 சதவீதமானவர்கள் குறைக்கப்பட வேண்டும். யாழ். சிறைச்சாலை நவீனமயப்படுத்தப்பட்ட சிறைச்சாலை என கூறப்பட்டது. இங்கு வந்து பார்த்த போது, நவீன மயப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.
சிறைக்கூடத்தில் 80 மேற்பட்ட கைதிகள் இருக்கின்றார்கள், எதிர்காலத்தில் ஒரு சிறைக்கூடத்தில் 2 கைதிகளை வைத்திருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
42 minute ago
45 minute ago