2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அரசியலில் பெண்களின் பங்கினை வலியுறுத்தி யாழில் கையெழுத்து ​வேட்டை

Gavitha   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஸன்

இலங்கை அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை, இன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, அவர்களை மேலும் வலிமைப்படுத்தல் என்பன தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 இச்செயற்றிட்டத்தை, மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் செயற்படுத்தி வருவதுடன்,  கடந்த 18ஆம் திகதி, காலியில் ஆரம்பமான இந்த கையெழுத்து வேட்டை, இன்றைய தினம்,  தலைமன்னாரில் நிறைவடையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X