2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அரசாங்கத்துக்கு ‘PTAஐ நீக்கும் எண்ணம் இல்லை’

Editorial   / 2018 ஜூலை 31 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இப்பொழுதும் வழக்குகள் மாற்றப்படுவதானது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் எண்ணமும் நல்லிணக்கத்தை நடைமுறையில் உருவாக்கும் எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளதென, நீதி, சமாதான ஆணைக்குழு இயங்குனர் அருட்திரு மதனராஜா தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் 110 வரையான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து கொண்டிருக்கின்றார்களெனத் தெரிவித்த அவர், அந்த அரசாங்கம் உண்மையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு விரும்பும் ஓர் அரசாங்கமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில், 210 வரையான அரசியல் கைதிகள் சிறையில் இருந்ததாகவும் அவர்களில் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ளார்களெனவும் அவர் ஞாபகமூட்டினார்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள், நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுவிக்கவில்லையெனக் குற்றஞ்சாட்டிய அவர், மாறாக அவர்களிடம் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்ற அடிப்படையில், சட்ட ரீதியாகவே விடுதலை செய்யப்பட்டார்களெனவும் தெரிவித்தார்.

எனவே, அரசாங்கம் உண்மையாக நல்லிணக்கத்தை விரும்பினால், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென, அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .