2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘அரசாங்கம் ஏமாற்றவில்லை’

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் 

 

புதிய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்ததாகக் கூறுபவர்கள், தற்போது தேர்தல் நெருங்கும் இச்சந்தர்ப்பத்தில், அரசாங்கம் ஏமாற்றிவிட்டதாகக் கூறுவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தான் ஒருபோதும் அரசாங்கம் ஏமாற்றிவிட்டதெனக் கூறப்போவதில்லையெனவும் கூறினார். 

30 வருடங்களின் பின்னர், அச்சுவேலி - மூளாய் பகுதிக்கான சிற்றூர்திச் சேவையை, இன்று (16) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கடந்த காலங்களில் தலைவர்களைத் தெரிவுசெய்து, எவ்வாறான ஏமாற்றங்களை அடைந்தனர் என்பதை மக்கள் உணர்ந்து, எதிர்வரும் தேர்தலில் சரியான தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

தான் ஒருபோதும் அரசாங்கம் ஏமாற்றிவிட்டதெனக் கூறப்போவதில்லையெனத் தெரிவித்த அவர், தனக்கு மக்கள் ஆணை கிடைத்தால், தான் மக்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். 

அதேவேளை, இப்பகுதி, மக்களுக்கு, ஒரு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், 30 வருடங்களின் பின்னர், அச்சுவேலி - மூளாய் பகுதிக்கு இடையிலான சிற்றூர்திச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .